கோவையில் நடைபெற்ற தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப் - இறுதிப் போட்டியில் சீறிப் பாய்ந்த கார்கள்…

published 12 hours ago

கோவையில் நடைபெற்ற தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப் - இறுதிப் போட்டியில் சீறிப் பாய்ந்த கார்கள்…

கோவை: பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனத்தின் 27 - வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை, செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே வளாகத்தில் நடைபெற்றது.

எல்.ஜி.பி பார்முலா 4 போட்டியில் 15 சுற்றுகள் மற்றும் 20 சுற்றுகளில் இறுதிப் போட்டியில் எல்.ஜி.பி ஃபார்முலா 4 பிரிவில் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இளம் வீரர் டிஜில் ராவ் சேம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

இதே போல ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான சேம்பியன்ஷிப் 10 சுற்று போட்டியில் பாண்டிச்சேரியை சேர்ந்த நவநீத் சேம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.

பிரபல ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இன்றைய இறுதிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கார் பந்தய வீரர்கள், கார் பந்தைய ஆர்வலர்கள் என ஏராளமானோர் இன்றைய போட்டியில் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe