கோவை ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சோகம்!

published 1 week ago

கோவை ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சோகம்!

கோவை: கோவையில் இன்று நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் தடுப்புகள் சாய்ந்து விழுந்ததால் குழந்தைகள் காயமடைந்தனர்.

கோவையில் ஒரு ஆண்டிற்கு பிறகு ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கடந்த வாரம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடங்கியது. இதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன.

இரண்டாவது வாரமான இன்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மக்கள்  நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அதிகப்படியான போலிசார் மற்றும் பவுன்சர்கள் பாதுகாப்பு பணிகளில்  ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது, பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ஒட்டியவாறு நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது தடுப்புகள் கீழே சாய்ந்ததில் பொதுமக்கள் சிலர் குழந்தைகளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதனால் சில குழந்தைகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசாரும், பவுன்சர்களும் அதனை சரி செய்தனர். மேலும் பொதுமக்களை தடுப்புகளை ஒட்டியவாறு நிற்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்திக்கான வீடியோவைக் காண லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்கிரப் செய்து ஆதரவு கொடுக்கவும்:  https://youtu.be/bAN1tbNfo2Y

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe