நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?- கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய பதில்!!!

published 5 hours ago

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?- கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய பதில்!!!

கோவை:கோவை மாநகர் சுங்கம் பகுதியில்  கடந்த 10ம் தேதியன்று மறைந்த முன்னாள் எம்பி இரா.மோகன் இலத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உறவினர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர்,  கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் இரா.மோகன் எனவும், சாதாரண பொறுப்பில்  இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர் என்றும்
அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு என்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட
கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது என்றார். ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்விற்கு பிறகு வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில்
200 என்ற இலக்கினை தாண்டி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கு குறித்தான கேள்விக்கு ராகுல்காந்தி அவர் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார் என பதிலளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், அந்த தொகுதி திமுக கூட்டணி வசமாகும் இந்தியா கூட்டணி வசமாகும.
ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து கேட்டதற்கு, அது ஒரு கொடுமையான சட்டம் எனவும் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல் எனவும் குறிப்பிட்டார்.

அம்பேத்கர் விவகாரம் தொடர்பான கேள்விக்கு இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அம்பேதகர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நன்றாக பார்க்கிறேன் என பதிலளித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், கே.என்.நேரு, முத்துச்சாமி, சாமிநாதன் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe