தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக களை விஞ்ஞானிக்கு முன்னவர் விருது...

published 2 weeks ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக களை விஞ்ஞானிக்கு முன்னவர் விருது...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உழவியல் பேராசிரியர் முனைவர் ப.முரளி அர்த்தநாரிக்கு இந்திய களை அறிவியல் சங்கத்தின் முன்னவர் விருது வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய களை அறிவியல் மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதானது முனைவார்.ப.முரளி அர்த்தநாரியின் களை மேலாண்மைப் பற்றிய ஆராய்ச்சிக்காவும் பயிர்களில் களை மேலாண்மை தொழில்நுட்பங்கள் உருவாக்கியதற்காகவும் மற்றும் 79 களை மேலாண்மை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தற்காவும் வழங்கப்பட்டது. மேலும், முனைவர்.ப.முரளி அர்த்தநாரி அவர்கள் வேளாண் பயிர்களான, தானியப்பயிர்கள், பயிர்வகைப்பயிர்கள், எண்வித்துபயிர்கள், நார்பயிர்கள் மற்றும் சர்க்கரைப்பயிர்களுக்கு ஒருங்கிணைந்த களை மேலாண்மைத்தொழில்நுட்பங்களும், ஆளில்லா விமானங்களின் மூலம் பயிர்களில் களை முளைப்பதற்கு முன்னும் களை முளைத்த பின்னும் களைகொல்லிகளை தெளிப்பது பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டு அதன் முடிவுகள் இந்திய நாட்டிற்கு ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாக விளங்கி வருகிறது.

முனைவர் முரளி அர்த்தநாரி, களை மேலாண்மையில் பதினொன்று முதுநிலை மற்றும் இரண்டு முனைவர் பட்டபடிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவருடைய மாணாக்கர்கள் இந்திய அரசாங்கத்தின் அறிவியல் தொழில்நுட்பத்துறையிடமிருந்து ஆராய்ச்சி உதவி தொகையை (INSPIRE Fellowship) ஒவ்வொரு மாதமும் பெற்று வருகின்றனர். இவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் பல பன்னாட்டு மற்றும் இந்திய அளவிலான அறிவியல் மாநாட்டுகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதானது ராணி லக்சுமிபாய் மத்திய பல்கலைக்கழக வேந்தர் முனைவர்.பஞ்சாப்சிங் மற்றும் புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக துணைபொது இயக்குநர் முனைவர்.சௌத்திர் இணைந்து வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe