கோவையில் காஸ்லி பைக்கில் வந்து பணத்தை திருடி சென்ற திருடன்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 1 week ago

கோவையில் காஸ்லி பைக்கில் வந்து பணத்தை திருடி சென்ற திருடன்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணத்தில் வெள்ளிக்கிழமை செல்போன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அங்கிருந்த ஊழியரின் கவனத்தை திசை திருப்பி மறும நபர் திருடி சென்றார்.

சூலூர் அருகே பட்டணத்தில் வசிப்பவர் செந்தில் (40). இவர் அதே ஊரில் தனது வீட்டினருக்கு செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை அவரது மனைவி மோனிகா (35) செந்தில் இல்லாத போது கவனித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் செல்போன் கடைக்கு வந்த மர்ம நபர் தனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது தண்ணீர் கொடுங்கள் என மோனிகாவிடம் கேட்டு அவரது கவனத்தை திசை திருப்பி உள்ளார். 

கடைக்கு பின்புறம் உள்ள அவர்களது வீட்டிற்கு தண்ணீர் எடுக்க மோனிகா சென்ற போது கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை லாவகமாக கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பினார். தண்ணீர் எடுத்து வந்து பார்த்த மோனிகா அங்கிருந்த நபரை காணாது தேடி உள்ளார். பின்னர் தனது கடையின் கல்லாப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதிலிருந்த 60000 ரூபாய் பணத்தை காணவில்லை என அதிர்ந்து தனது கணவர் செந்திலுக்கு தகவல் தெரிவித்தார். 

செந்தில் உடனடியாக செல்போன் கடைக்கு வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அதில் தண்ணீர் கேட்ட அந்த இளைஞர் பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து காவல்துறையினர் செல்போன் கடையில் திருடிய அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/dfs0VEBvxds

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe