குழந்தைகளுக்காக நாளை முதல் கிரீன் மேஜிக் பிளஸ் ஆவின் பால் விநியோகம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

published 3 days ago

குழந்தைகளுக்காக நாளை முதல் கிரீன் மேஜிக் பிளஸ் ஆவின் பால் விநியோகம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

கோவை: குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படுவதை குறைக்கும் பொருட்டு "வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி" செறிவுட்டப்பட்ட"கிரீன் மேஜிக் பிளஸ்" பாலை, கோவை ஆவின் நிர்வாகம் நாளை 18/12/2024 முதல் அறிமுகப்படுத்த உள்ளது. 450 மி.லி, அளவு கொண்ட அந்த பால் அதிகபட்ச சில்லரை விற்பனை விலை ரூ.25.00 என நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படவுள்ளது.

தற்போது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே "வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி" சத்து குறைபாடு இருப்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் அதற்கு ஏற்றவாறு 4.5 சதவீத கொழுப்பு சத்து மற்றும் 9.0 சதவித இதர சத்துகளுடன் கூடிய "வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி" செறிவுட்டப்பட்ட "கிரீன் மேஜிக் பிளஸ்" என்ற புதிய வகை பால் கோவை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது.

அதே நேரம் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலும் தொடர்ந்து வழங்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe