திமுக வழக்கறிஞர்கள் தயாராக இருங்கள்- கோவையில் நடந்த கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர் இளங்கோ கூறியது என்ன...

published 1 day ago

திமுக வழக்கறிஞர்கள் தயாராக இருங்கள்- கோவையில் நடந்த கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர் இளங்கோ கூறியது என்ன...

கோவை: கோவை காளப்பட்டியில் திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர்  அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டத்துறை செயலாளர் இளங்கோ பேசுகையில்,

இப்போது இருந்தே நாம் கடுமையாக உழைத்தால், திமுக 56 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்று விடலாம். அனைவரும் ஓரணியில் இருந்து பணியாற்ற வேண்டும். பில்ஏ 2 வில் இருக்கின்ற புரிதல், நடைமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும். தொகுதி பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டு , வெவ்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பபடுவார்கள். அதற்கு வழக்கறிஞர்கள் தயாராக இருக்க வேண்டும். 

ஒரு காவல்நிலையத்திற்கு 5 லிருந்து 7 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் பணிபுரியும் வழக்கறிஞர்கள் பட்டியலை தயார் செய்து வரும் ஜனவரிக்குள் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

வாக்குபதிவு  எந்திரத்தை தொடர்ச்சியாக கண்காணிப்பது திமுக வழக்கறிஞர் அணி மட்டும் தான். வாக்குப்பதிவு எந்திரத்தின் புரிதலை நாம் அதிகப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். கழக வழக்கறிஞர்கள் இப்போதே தேர்தல் கமிஷனின் விதிகளை தெரிந்து கொள்ளுங்கள் . 

அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையின் 10 தொகுதிகளையும் வெற்றி பெற்று தலைவரிடம் ஒப்படைப்பார். என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

இந்த நிகழ்வில், தலைமை கழக வழக்கறிஞர் சரவணன், சட்டத்துறை இணைச்செயலாளர் அருள்மொழி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் தொஅ.ரவி, தளபதி முருகேசன், மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe