காந்திபுரத்தில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி…

published 5 hours ago

காந்திபுரத்தில் ஜவுளிக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி…

கோவை: கோவை காந்திபுரம் அருகே உள்ள பிகேஆர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(51). இவர் காந்திபுரம் - சத்தி ரோட்டில் குழந்தைகளுக்கான ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை கடையை திறந்த சந்தோஷ்குமார் வழக்கம்போல வியாபாரத்தை முடித்து கொண்டு இரவில் கடையை பூட்டி விட்டு சென்றார். 

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததாலும், ஷட்டரை உடைக்க முடியாததாலும் பாதியில் தங்களது முயற்சியை கைவிட்டு தப்பி சென்றனர். மறுநாள் கடையின் ஷட்டர் பாதி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த பக்கத்து கடைக்காரர் ஒருவர் செல்போன் மூலம் சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து காட்டூர் போலீசில் சந்தோஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe