கோவையில் நாளை 'ஸ்பர்ஸ்' பாதுகாப்பு ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம்- முன்னாள் படைவீரர்கள் கவனத்திற்கு...

published 9 hours ago

கோவையில் நாளை 'ஸ்பர்ஸ்' பாதுகாப்பு ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம்- முன்னாள் படைவீரர்கள் கவனத்திற்கு...

கோவை: 'SPARSH (ஸ்பர்ஸ்)' மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA, Chennai) அலுவலகத்தின் சார்பாக, 'SPARSH (ஸ்பர்ஸ்)' ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

இந்த முகாம் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கோயம்பத்தூர் Sri Ramakrishna College of Arts & Science, SNR Auditorium, Nava India Bus Stop, Avinashi Road, நடைபெற உள்ளது. இதில் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன், IDAS தலைமை தாங்குகின்றார்.

உயிர் சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும். ஓர் ரேங்க், ஓர் பென்ஷன் (OROP) ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படை வீரர் மற்றும் சார்ந்தோர் தங்களது படை பணிச்சான்று, அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வங்கி கணக்கு பத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் உடன் நேரில் நேரில் வந்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

இந்த அரிய வாய்ப்பினை ஒய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe