மதுக்கரை அருகே இரசாயன கழிவுகளுடன் வெளியேறும் தடுப்பணை நீர்...

published 1 week ago

மதுக்கரை அருகே இரசாயன கழிவுகளுடன் வெளியேறும் தடுப்பணை நீர்...

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக மதுக்கரை, குரும்பபாளையம் தடுப்பனையில் மழைநீர் நிறைந்து செல்கிறது.  

இந்தத் மழைநீரில் மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுகள் போன்ற கழிவுகள் அதில் கலப்பதால் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் மலைபோல் நுரை தேங்கி காட்சி அளிக்கிறது.

இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைவதுடன் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதி உள்ள கால்நடைகள், மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் இதனால் மேலும் அப்பகுதி நிலத்தடி நீர் மாசடைவதற்கு முன்பு கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற குளங்கள் தூய்மைப்படுத்து போன்று இந்த தடுப்பனையையும், தூய்மைப்படுத்தி அதில் கலக்கும் கழிவு நீரை தடுத்து நிறுத்த தமிழக அரசும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe