வடகோவை சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி…

published 2 weeks ago

வடகோவை சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி…

கோவை: கோவையில் நேற்று இரவு மழையின் காரணமாக வடகோவை மேம்பாலத்தில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன மக்கள் அவதியடைந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்றவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

கோவை மாநகரில் பிரதான சாலைகளை இணைக்க கூடிய சுரங்கப்பாதை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து மழைநீருடன் கழிவு நீர் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe