மேற்குவங்கத்தில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட தேயிலை கழிவுகள்- விரட்டி பிடித்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை...

published 1 week ago

மேற்குவங்கத்தில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட தேயிலை கழிவுகள்- விரட்டி பிடித்த அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை...

கோவை: தேயிலை வாரிய குன்னூர் மண்டல அலுவலக அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து முறையற்ற வகையில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 13,600 கிலோ தேயிலைக் கழிவுகளை ஏற்றிச் சென்ற லாரியை துரத்திச் சென்ற குழுவினர் துடியலூர் அருகே அதனைப் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, லாரியில் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அத்தேயிலைக் கழிவுகள் சென்று சேர வேண்டிய உரிமையாளர் வளாகத்திற்கு வாகனத்துடன் எடுத்துச் செல்லப்பட்டு, மொத்த தேயிலைக் கழிவுகளையும் உரிமையாளரின் இடத்தில் இறக்கி தேயிலை வாரிய சட்ட திட்டங்களுக்கு இணங்க முற்றிலும் அழித்தனர்.

தேயிலைக் கழிவுகளை வாங்கியவர், அதனைப் பற்றிய முழு விபரங்கள் மற்றும் உரிய ஆவணங்களை முறையான விளக்கத்துடன், தேயிலை வாரியத்திடம் சமர்ப்பிக்க உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கடந்த காலங்களில் அவர் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்த அனைத்து தேயிலை மற்றும் தேயிலை கழிவுகள் சம்மந்தமான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

கோரப்பட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட பின், உரிய முறையில் அதனை ஆய்வு செய்து அதன் நம்பகத்தன்மையைப் பொறுத்து தேயிலை வாரியத்தின் தற்போது நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களுக்கு இணங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்வரும் காலங்களில், இது போன்ற தேயிலைக் கழிவுகளை முறையற்ற முறையில் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனரை ஆய்வுக் குழுவினர் எச்சரித்தனர்.

இது போன்று முறையற்ற முறையில் தேயிலைக் கழிவுகளை வட மாநிலங்களிலிருந்து வாங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேயிலை வாரியத்தின் செயல் இயக்குநர் எச்சரித்துள்ளார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe