கோவைக்கு மீண்டும் வருகிறது ஹாப்பி ஸ்ட்ரீட்...

published 3 days ago

கோவைக்கு மீண்டும் வருகிறது ஹாப்பி ஸ்ட்ரீட்...

கோவை: ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோவையில் மீண்டும் வாரந்தோறும் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிகத்தின் பல்வேறு மாநகரங்களிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வந்தது. நகரின் முக்கிய சாலையை காலை நேரத்தில் மக்கள் முழுவதும் ஆக்கிரமித்து பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடும் வகையில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டி வந்தது.

இதில் குழந்தைகள், இளைஞர்கள் முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடி, ஆடிப்பாடி மகிழ்ந்து வந்தனர்.

பல்வேறு காரணங்களால் கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி சில மாதங்களாக நடைபெறவில்லை.

இந்த நிலையில், கோவையில் மீண்டும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

Follow our WhatsApp channel to get Coimbatore updates https://whatsapp.com/channel/0029VaBGFq7JZg4EvHELBx3R

வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6:30 மணி முதல் 9 மணி வரை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe