ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தாமதம் - கோவை மின் உற்பத்தி கழக பேருந்து ஜப்தி…

published 10 hours ago

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தாமதம் - கோவை மின் உற்பத்தி கழக பேருந்து ஜப்தி…

கோவை: கோவை மாவட்டம், வால்பாறை அருகே காடம்பாறை நீர் மின் சக்தி உற்பத்தி மையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இதில் 28 தொழிலாளர்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வேலையில் இருந்து நீக்கியது. 

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சார்பில் கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற அளித்த தீர்ப்பை எதிர்த்து மின்சார வாரிய மேல்முறையீடு செய்தது. அதில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மாதாந்திர ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயல்படுத்தாமல் தாமதம் செய்தது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அருணாச்சலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து காடம்பாறை நோக்கி வந்த மின் உற்பத்தி கழக பேருந்து ஜப்தி செய்யப்பட்டு கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe