முன்னாள் கோவை எம்பி இரா.மோகனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

published 1 week ago

முன்னாள் கோவை எம்பி இரா.மோகனின் இழப்பு ஈடு செய்ய முடியாதது- உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

கோவை: கோவையில் மறைந்த திமுக முன்னாள் எம்பி இரா.மோகன் உடல் ராமநாதபுரம் பகுதயில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோவை வந்த தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி,  கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள மறைந்த இரா.மோகன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், திமுகவின் மூத்த முன்னோடியும் கலைஞர் கருணாநிதியின் அன்பு தம்பியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பருமான இரா.மோகனின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றார். மேலும், இரா.மோகன் தனது 13 வயதிலேயே திமுகவிற்கான பணிகளில் ஈடுபட்டவர் என்றும் எமர்ஜென்சி காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறை கொடுமையை அனுபவித்தவர் என்றும் கூறினார். மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டவர் என்றும் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கோவை வரும்போதெல்லாம் இரா.மோகனை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு தான் செல்வார் என்றார். இன்று ஒரு மிகப்பெரிய துயரமான நாள் என்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe