கோவை அ.தி.மு.க கள ஆய்வுக்குழு ஆலோசனை ரகசிய கூட்டம்!

published 4 days ago

கோவை அ.தி.மு.க கள ஆய்வுக்குழு ஆலோசனை ரகசிய கூட்டம்!

கோவை: கோவையில் நடைபெற்று வரும் அ.தி.மு.க கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்காமல் ரகசியமாக நடைபெற்றது.

அ.தி.மு.க சார்பில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாநகர் மாவட்டம் சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கள ஆய்வு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகளை அ.தி.மு.க கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் ஏற்பாடு செய்தார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அ.தி.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் நடைபெற்ற போது, ஏற்பட்ட சலசலப்புகள், உட்கட்சி சண்டைகள் ஊடகங்களில் வெளியானதால் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe