நான் ஒரு கிறிஸ்தவன் என கூறுவதில் பெருமைப்படுகிறேன் இது சங்கிகளை கோபப்படுத்தும்- கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

published 1 day ago

நான் ஒரு கிறிஸ்தவன் என கூறுவதில் பெருமைப்படுகிறேன் இது சங்கிகளை கோபப்படுத்தும்- கோவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு...

கோவை: கோவை சத்தி சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில், கிறிஸ்து பிறப்பு விழா நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய  உதயநிதி ஸ்டாலின், உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா எனவும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் எனவும் கூறினார். தான் படித்த பள்ளி  டான்பாஸ்கோ, கல்லூரி லயோலா என்று கூறிய அவர், நானும் ஒரு கிறிஸ்துவன் என்பதில் பெருமைப்படுகிறேன்
இது பல சங்கிகளை கோபப்படுத்தும் என்றார். அனைத்து மதங்களும் அடிப்படையில் அன்பை தான் போதிக்கின்றன என்றார். அதே மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு சிலர் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார். என்னை கிறிஸ்துவன் என்று நினைத்தால் கிறிஸ்துவன், இஸ்லாமியன் என நினைத்தால் இஸ்லாமியன், இந்து என நினைத்தால் இந்து என்றார்.

சமூக வலைத்தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும், பொய்யை மட்டுமே அவர்கள் பரப்பி வருவதாக தெரிவித்தார். சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி உள்ளதை சுட்டிக்காட்டிய உதயநிதி, இப்படி ஒரு நீதிபதி இருந்தால், நீதிமன்றத்தில் நியாயம் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். மதரீதியான அவதூறு பேச்சு பேசிய நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது, அதிமுக அதனை ஆதரிக்கவில்லை என்றார். இதன் மூலம்
அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணி தொடர்கிறது என்பது உறுதியாகிறது என்றார்.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஒரு தீர்மானம் கூட மத்திய பாஜக அரசை கண்டித்து இயற்றப்படவில்லை என்பதே இதற்கு சாட்சி என்றார்.
திராவிட இயக்கம் இருக்கும் வரை, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்போம் எனக் கூறிய அவர்,
கிறிஸ்தவ மக்கள் வைத்த கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், திமுக கூட்டணிக்கு உங்கள் ஆதரவை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe