ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும்- கோவை பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை...

published 4 days ago

ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும்- கோவை பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் கோரிக்கை...

கோவை: பைக் டாக்ஸி ஓட்டுநர்களை அச்சுறுத்தி வரும்,  ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் தனியார் செயலி மூலம் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நபர்களை ரயில் நிலையம்,  காந்திபுரம்,  குனியமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும்,  வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பை சேர்ந்த நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய பைக் டாக்ஸி அசோசியேசன் உறுப்பினர் சுகையில் அகமது கூறியதாவது :  தொடர்ந்து பைக் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களின்  அச்சுறுதல்களை எதிர்கொள்கிறோம்  வாடிக்கையாளர்கள் செயலி மூலம் பைக் டாக்ஸியை புக் செய்கின்றனர்.  அவர்களை அழைக்க வரும்போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இருந்தால் சிறிது தூரம் தள்ளி வருமாறு அறிவுறுத்துகிறோம். 

அப்போது வரும் வாடிக்கையாளர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டுகிறார்கள்.  வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்லும் போது எங்களது வாகனங்களை வழிமறைத்து ஒறுமையில் பேசி மிரட்டுகிறார்கள்.  அவர்களிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.  அண்மையில் பெண் பைக் டாக்ஸி ஓட்டுனரையும் ஆட்டோ ஓட்டுநர்கள் அச்சுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe