கோவையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆய்வு...

published 3 hours ago

கோவையில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து  ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆய்வு...

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன்  கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) ஸ்வேதாசுமன்  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

உக்கடம், புல்லுக்காடு பகுதியில் BSUP SR திட்டத்தின் கீழ் ஆசாத் நகர், சேரன் நகர்சாரமேடு சாக்கர் நகர், இளகிநகர், பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 24x7 குடிநீர் வழங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் 22.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி, மற்றும் அலமீன் காலனி, ரோஸ் கார்டன், பொன்விழா நகர்அன்பு நகர்ஜிஎம் நகர், ஜேகே கார்டன் கோட்டை புதூர் அண்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு 22 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியினையும்,  ஆய்வு மேற்கொண்டு
பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் துறையின் சார்பில்செல்வபுரத்தில் ரூ.9 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தையும், பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வால்பாறையில் உள்ள ஆதிதிராவிடர் நல பெண்கள் கல்லூரியின் மாணவியர் தங்கும் விடுதியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe