வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினை- மனிதசங்கிலி போராட்டம் நடத்திய மக்கள்...

published 1 day ago

வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினை- மனிதசங்கிலி போராட்டம் நடத்திய மக்கள்...

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தினமும் சேகரிக்கப்படும் அனைத்துவித குப்பைகழிவுகளும், போத்தனூர் - செட்டிபாளையம் சாலையில், ஸ்ரீராம் நகரை ஒட்டியுள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையின் ஒரு பகுதியில் கொட்டப்படுகிறது.

இதனால் கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதனை சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த இயலாத நிலைக்கு மாறிவிட்டது.

பலவித தொற்றுநோய்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். துர்நாற்றத்தால் தினமும் அவதிப்படுகின்றனர். பலவித போராட்டங்கள் நடத்தியும், வழக்கு தொடர்ந்தும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 'வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு' எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஸ்ரீராம் நகர், அன்பு நகர், கோணவாய்க்கால்பாளையம், மகாலிங்கபுரம், மேட்டூர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்று , குப்பை கிடங்கை அகற்றக் கோரி,  மனித சங்கிலி போராட்டத்தை, பைபாஸ் சாலை பாலம் துவங்கி, வெள்ளலூர் வரை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe