கோவை அருகே யானையை பார்த்து அலறிய இளம்பெண்- வீட்டாரை பயத்துடன் அழைத்த காட்சிகள்....

published 6 days ago

கோவை அருகே யானையை பார்த்து அலறிய இளம்பெண்- வீட்டாரை பயத்துடன் அழைத்த காட்சிகள்....

கோவை: கோவை துடியலூர், தடாகம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. அந்த யானைகள் கூட்டமாகவும் தனியாகவும் ஊருக்குள் உலா வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் விளை நிலங்களை சேதபபடுத்தி செல்கின்றன.

இந்நிலையில் பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியில் உள்ள மேட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி வேலுமணி (74) என்பவர் தோட்டத்திற்கு முன்புற கேட்டை பூட்டுவதற்காக சென்று பூட்டிக் கொண்டு இருந்த போது அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறை மற்றும் பெரியநாயக்கன் பாளையம் காவல் துறையினர் வேலுமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அந்த யானைஅந்த ஊருக்குள் உலா சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு வீட்டில் வீட்டார் அனைவரும் யானையை பார்க்க வீட்டில் இருந்து வெளியே நின்று கொண்டிருந்த நிலையில் அவ்வீட்டின் இளம்பெண் பயத்தில் யானை வருகிறது என கூச்சலிட்டு அனைவரையும் உள்ளே வருமாறு அச்சத்தில் கத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DE37P5SvmMr/?igsh=OWh0MGRyYnJtdDRm

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe