கோவையில் மருத்துவத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது- அமைச்சர் மதிவேந்தன் வழங்கி கெளரவிப்பு...

published 2 days ago

கோவையில் மருத்துவத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது- அமைச்சர் மதிவேந்தன் வழங்கி கெளரவிப்பு...

கோவை: இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI / பிக்கி) தமிழக மருத்துவத்துறை மாநில கவுன்சில் சார்பில் பிக்கி டான்கேர் 2025 மருத்துவ கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழா கோவையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

FICCI தமிழக மருத்துவ குழுவின் கன்வீனர் மற்றும் ஜெம் மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜ் அனைவரையும் வரவேற்று, இந்த கருத்தரங்கின் கரு - 'நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் - மருத்துவத்துறையில் ஏற்படும் மாற்றங்களை தழுவுதல்' - குறித்து பேசினார்.

இந்த கருத்தரங்கில், முன்னணி மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் உள்பட மருத்துவத்துறையின் நிர்வாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், மருத்துவ காப்பீடு துறையினர், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், ஸ்டார்ட் அப் நிறுவனத்தினர், மருந்துகள் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள்பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் 'சமகால மருத்துவ தொழில்நுட்பத்தை தழுவுதல், மருத்துவ செயல்முறை மற்றும் விளைவுகளை மேம்படுத்துதல்' ; ' மருத்துவ காப்பீடு இயக்கத்தில் மாறிவரும் முறைகள்'; 'மருத்துவத்துறையில் மனித வளத்தை திறம்பட மேலாண்மை செய்தல் - தெரியப்படுத்த திறமைகொண்ட பணியாளர்களை கண்டறிதல்' போன்ற 3 முக்கிய தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றது.

நிகழ்வின் ஒரு பகுதியாக மருத்துவதுறையின் பல்வேறு பிரிவுகளில் சாதனை செய்தோரை கவுரவிக்கும் டான்கேர் மருத்துவ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் மாண்புமிகு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. எம். மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை தேர்வான நபர்களுக்கு பிக்கி தமிழக மருத்துவத்துறை மாநில கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே. வேலு; இணை தலைவர் பூபேஷ் நாகராஜன் மற்றும்  FICCI தமிழக மருத்துவ குழுவின் கன்வீனர்  டாக்டர் பிரவீன் ராஜ் மற்றும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நிர்மலா ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe