கோவையில் கேஸ் டேங்கர் கவிழ்ந்து விபத்து குறித்து பெட்ரோலிய நிறுவனத்தின் மெக்கானிக் காண்ட்ராக்டர் கூறுவது என்ன?

published 3 days ago

கோவையில் கேஸ் டேங்கர் கவிழ்ந்து விபத்து குறித்து பெட்ரோலிய நிறுவனத்தின் மெக்கானிக் காண்ட்ராக்டர் கூறுவது என்ன?

கோவை: உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் கவிழ்ந்து விபத்து குறித்து நடந்த இடத்தில் மத்திய பெட்ரோலிய நிறுவனத்தின் மெக்கானிக் காண்ட்ராக்டர் ராபர்ட் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிகாலை மேம்பாலத்தில் திரும்பும் பொழுது டேங்கர் விழுந்து உள்ளதாகவும் இது குறித்து தகவல் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்து லீக்கேஜ் அடைக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 80 முதல் 100 கிலோ லீக்கேஜ் ஆகியிருக்கும் எனவும் இதனை குடோனுக்கு எடுத்த சென்றவுடன் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

டேங்க் பாதுகாப்பாக தான் இருக்கிறது என கூறிய அவர் பிரஷர் கேஜ் உடைந்திருப்பதாகவும் தற்பொழுது அது மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கமாக பைபாஸ் சாலையில் தான் செல்வார்கள் இன்று ஏதோ தவறுதலாக இங்கு வந்ததாக தெரிகிறது என கூறினார். எப்பொழுதும் வாகனத்தை சரிபார்த்த பிறகுதான் அனுப்புவோம் எனவும் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe