சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு...

published 5 days ago

சூலூர் திருவேங்கடநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்பு...

கோவை: கோவை மாவட்டம்சூலூர் வட்டம், அருள்மிகு திருவேங்கடநாத பெருமாள் திருக்கோவிலுக்கு சொந்தமான சூலூர் கிராமம் 1.03 ஏக்கர் நன்செய் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தார்.

இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும்பொருட்டு அவர்  மீது இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன்கீழ் வழக்கு தொடர தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கோவை, இணை ஆணையர்  உத்தரவின்படி உதவி ஆணையர் 
இந்திரா முன்னிலையில் ஆக்கிரமிப்பாளரிமிடமிருந்து நிலம் மீட்கப்பட்டது. 

மீட்கப்பட்ட நிலம்  திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் போது திருக்கோயில் செயல் அலுவலர் பேபிஷாலினி, சரக ஆய்வர், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் (ஆலய நிலங்கள்) மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் உடன்  இருந்தனர். இதன் தற்போதைய மதிப்பு சுமார் 1 கோடி ஆகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe