பீப் கடை விவகாரம்: பா.ஜ.க பிரமுகர் மீது ஜாதி ரீதியில் பகை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு!

published 10 hours ago

பீப் கடை விவகாரம்: பா.ஜ.க பிரமுகர் மீது ஜாதி ரீதியில் பகை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு!

கோவை: உடையாம்பாளையத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது நான்கு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை கணபதி உடையாம்பாளையம் பகுதியில் ஆபிதா ரவிக்குமார் தம்பதி தள்ளுவண்டி கடையிக் பீப் பிரியாணி பீப் சில்லி உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர மாவட்ட பாஜக OBC பிரிவு செயலாளர் சுப்ரமணி இங்கெல்லாம் பீப் விற்பனை செய்யக்கூடாது என மிரட்டிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து துடியலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் துடியலூர் காவல்துறையினர் பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது 
351(2)- கிரிமினல் குற்றத்துடன் மிரட்டல் விடுத்தல், 126(2)- தனி நபர் செயல்களை தடுப்பது, 192- ஆத்திரமூட்டுதல்,
196 - சாதிய அடிப்படையில் பகைமையை ஏற்படுத்த முயலுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe