ஒரு பேட்டி கொடுத்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுட்டப்பா!

published 2 days ago

ஒரு பேட்டி கொடுத்ததுக்கு உன்னால என்ன செய்ய முடியுமோ செஞ்சுட்டப்பா!

கோவை: புலியின் நகத்தை கழுத்தில் அணிந்திருந்த நபரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Instagram சமூக வலைதளத்தில் ஒரு பக்கத்தில் Instagram பக்கத்தின் நபர் பாலகிருஷ்ணன் என்பவர் கழுத்தில் அணிந்திருந்த வித்தியாசமான அணிகலன் பற்றி கேட்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணன் அது புலியின் நகம் என்றும் ஆந்திரா அருகில் அதனை வாங்கியதாகவும் தனக்கு வேட்டையாடும் ஆசை இருப்பதாகவும் ஆனால் வேட்டைக்கு செல்லவில்லை தெரிவித்துள்ளார்.  
இதனை அந்த Instagram நபர் அவரது பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அது வைரலானது.

இந்த வீடியோ வைரலான நிலையில், வனத்துறையினர் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள வீட்டை சோதனையிட்டுள்ளனர். சோதனையில் ஒரு புள்ளிமானின் கொம்புத்துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலகிருஷ்ணன் இன்று வனத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரான நிலையில் அவரிடம் இருந்து நகம் போன்ற அணிகலன் பெறப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அந்த நகம் நீதிமன்றம் மூகல் AIWC க்கு அனுப்பப்பட்டு அறிக்கை கிடைத்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DFAN-qWvD7G/?igsh=dXM1Nm9zOXNvMzFl

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe