இருட்டுக்கடை: மனைவி தான் தவறு... கோவையில் ஆதாரங்களைப் புட்டுப்புட்டு வைத்த மாப்பிள்ளை!

published 1 day ago

இருட்டுக்கடை: மனைவி தான் தவறு... கோவையில் ஆதாரங்களைப் புட்டுப்புட்டு வைத்த மாப்பிள்ளை!

கோவை: இருட்டு கடை அல்வா உரிமையாளரின் மகன் முன் வைத்துள்ள வரதட்சனை புகாரை மாப்பிள்ளை வீட்டார் மறுத்துள்ளனரர். அந்தப் பெண் நடு இரவில் நண்பர்களுடன் செல்போனில் பேசுவதாகவும் அதனை கேட்கும் பொழுது தன்னை யாரும் கண்ட்ரோல் செய்யக்கூடாது என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்...


இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா திருநெல்வேலியில் உள்ள, இருட்டுக்கடை அல்வா கடையை  வரதட்சணையாக கேட்பதாகவும் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் கார் வாங்கித் தர தன்னை வற்புறுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார்.

இந்த  நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிஷகாவின் கணவர் பல்ராம் சிங் ,மற்றும் பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜ் சிங் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது பேசிய அவர்கள் நான்கு தலைமுறைகளாக ஏற்றுமதி தொழில் செய்து சொத்துக்களை சம்பாதித்து வைத்துள்ளோம். ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டவர்கள் நாங்கள்  ஏழு கோவில்களை நாங்கள் கட்டி உள்ளதால் சாதாரண குடும்பத்தில் இருந்து பெண் எடுக்க வேண்டும் என்று ஒரு மெக்கானிக் மகளை எனது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்தேன். இருட்டு கடை என்ற கடை 350 நாட்களுக்கு முன்பு தான் என்னுடைய சம்பந்தியான கவிதா அவர்களுக்கு வந்தது அதற்கு முன்பு எல்லாம் அவர் ஒரு மெக்கானிக்கின் மனைவி தான் தெரிவித்தார்.  அந்த மெக்கானிக் கடை கூட இவர்களிடத்தில் வந்ததில் சந்தேகம் இருக்கிறது, இவர்களுடன் பார்ட்னர் ஆக இருந்தவர்களின் கையெழுத்தை இவர்களே போட்டு கடையை அபகரித்து கொண்டதாக ஒரு வழக்கு திருநெல்வேலி டி சி ஆபீஸில் இருக்கிறது.

அந்த இருட்டுக்கடையை இதற்கு முன்னாள் பார்த்து வந்த ஹரிசிங் என்பவரும் சுலோச்சனா பாய் என்பவரும் இறந்துவிட்ட நிலையில் அவர்களுடைய மரணத்திலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக திருநெல்வேலி யில் பேசிக்கொள்கிறார்கள். இருவரும் இறந்த பிறகு அந்த கடை இவர்கள் கையில் வருகிறது. திருமண சம்பந்தம் எல்லாம் பேசி முடித்த பிறகு தான் அந்த கடைசி இவர்கள் கையில் வருகிறது எனவே அந்த கடையை பார்த்து இந்த திருமணத்தை நடத்தவில்லை.


திருநெல்வேலியில் இந்தியன் வங்கியில் 5 கோடி ரூபாய் கடன் இருட்டுக்கடையில் கிருஷ்ண சிங் ஸ்வீட் கடைக்கு உள்ளது. அவர்களிடம் இருந்த இரண்டு கார்களும் லோனில் தான் உள்ளது அதில் ஒரு காரின் லோன் கட்ட முடியாமல் அதனை விற்று விட்டார்கள். அந்தப் பெண் பார்லர் செல்கிறேன் என்று கூறிவிட்டு 4 மணி நேரம் கழித்து தான் வீட்டுக்கு வருகிறார். இதை கேட்கச் சென்றால் சந்தேகம் படுகிறீர்களா என்ற கோணத்தில் பிரச்சனையை கிளப்புகிறார். என்னுடைய மகன் லண்டனில் படித்தவர் இஸ்ரோவில் ஆராய்ச்சியில் இருந்தவர்.

டிபன்டர் காரை வரதட்சணையாக கேட்டோம் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள், அந்த காரை நான் என்னுடைய பெயரில் புக் செய்துள்ளேன். மேலும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்ற தேதியில் என்னுடைய மனைவி சிங்கப்பூரில் இருந்தார். மேலும் அந்த பெண்ணுக்கு மனநோய் இருந்தது அது அவரது பேட்டியிலேயே தெரியும் டாக்டர் எனக்கு கவுன்சிலிங் தந்ததாக அவரே கூறுகிறார். வண்ணாரப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்று விசாரித்தால் அது தெரியவரும்.

அவர்கள் முன் வைத்துள்ள குற்றச்சாட்டு எந்த ஒரு முகாந்திரமும் ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு. எங்களை ஏமாற்றி இந்த திருமணத்தை செய்து விட்டனர் இருந்தபோதிலும் மெக்கானிக் பெண்ணாக கனிஷ்கா திருந்தி திரும்பி வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்ளோம் என்றனர்.

அவர் நடுராத்திரியில் நண்பர்களுக்கு அலைபேசியில் பேசுகிறார். சாதாரண நாட்களில் பார்லருக்கு சென்றாலும் சுமார் 4 மணி நேரம் கழித்து தான் வருகிறார. இதனை கேட்டால் என்னை யாரும் கண்ட்ரோல் செய்யக்கூடாது என்று கூறுகிறார். இந்த வாக்குவாதத்தில் தான் அவர் கிளம்பிச் சென்றார் என கூறினார். அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு மூன்று முறை நிச்சயதார்த்தம் செய்து திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது அது எந்த காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை, அதுவும் திருமணத்திற்கு பின்பு எங்களுக்கு தெரிய வந்தது. அதுமட்டுமின்றி இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் அம்மாவே வரவில்லை. தாய் மாமனும் வரவில்லை.  கனிஷ்கா எங்கள் குடும்பத்தை பற்றி பலரிடமும் விமர்சனம் செய்துள்ளார் என்னுடைய தாய் தந்தையை ஒருமையில் பேசியிருக்கிறார்.

அந்தப் பெண் இவ்வாறெல்லாம் பேசிய ரெக்கார்டு எங்களிடம் இருப்பதை அறிந்து கொண்டு அவர்களது உறவினர்கள் தொடர்ந்து எங்களை தொடர்பு கொண்டு அந்த ரெக்கார்டை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். 
அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளை ஆக வர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் அவ்வாறு செல்லாத பின்பு தான் இந்த பிரச்சனை எல்லாம் துவங்கியது. நாங்கள் ஒரு ரூபாய் கூட வரதட்சணையாக கேட்கவில்லை. திருமணம் முடிந்து ஒரு பேக்  நிறைய நகைகளை எடுத்து வந்தார் அதுவும் வீட்டில் இருந்து செல்லும் போது எடுத்து கொண்டு சென்று விட்டார்.

மேலும் இவர்கள் தங்கி இருக்கின்ற வீடும் இவர்கள் வைத்திருந்த ஒர்க்ஷாப் ஆகியதும் சூரஜ் என்பவர் பெயரில்தான் உள்ளது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சி ஏற்பாடுகள் கூட கோவையில் இருந்து நான் தான் என்னுடைய நண்பர்கள் மூலமாக செய்தேன். அவர் திருந்தி மீண்டும் ஒரு மெக்கானிக் மகளாக வந்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ள தயார் என கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe