கள் இறக்க அனுமதி வேண்டும்- கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

published 22 hours ago

கள் இறக்க அனுமதி வேண்டும்- கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

கோவை: கோவை, சிவானந்தா காலனியில் பனை, தென்னை கள் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைந்து விவசாயிகள் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விவசாயிகள் கையில் கள் வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கள் இறக்க தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும், தமிழக காவல் துறையினர் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

இப்போராட்டத்தில் விவசாயிகள் பானை மற்றும் பாட்டில்களில் கள் வைக்கும் கள்ளை குடித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,

ஸ்டாலின் அரசு மதுவை விற்பனை செய்வதற்காக இயற்கையாக கிடைக்கக் கூடிய கள்ளை இறக்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டும், பெண் விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்து வருவதாகவும், மேற்கு மண்டலத்தில் தென்னை சாகுபடி குறைந்த அளவில் உள்ளதால் கள் உற்பத்தி செய்தால் மட்டுமே வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் என்றும் கள்ளை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் கள் விற்பனை செய்து வருவதாகவும் ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழக அரசு கள் விற்பனையை தடை செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தேங்காய் எண்ணையை பொது விநியோகம் செய்ய வேண்டும் பாமாயிலை தடை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்-யை வைத்து தமிழக அரசு  மதுபானங்களின் விற்பனை அதிகரிக்க செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

எதிர்க்கட்சியாக இருந்த போது  ஸ்டாலின் கள்ளுக்கு ஆதரவு தெரிவித்தார். தற்பொழுது முதல்வரான பிறகு கள்ளுக்கு அனுமதி தராமல் மறுப்பு தெரிவித்து வருவதாக விவசாயிகள் வேதனையை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe