பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம்- கோவையில் கோரிக்கை...

published 1 day ago

பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம்- கோவையில் கோரிக்கை...

கோவை: டிரான்ஸ்போர்ட் லாரி பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்து தர வேண்டும் என கோவையில் நடைபெற்ற கோயம்புத்தூர் லாரி டிரான்ஸ்போர்ட் பாரம் தூக்கம் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட லாரி டிரான்ஸ்போர்ட் பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா கோவை பூ மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. 

இந்த விழாவில் நலிவடைந்த பாரம் தூக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள், கல்வி உதவிகள், விதவை பெண்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய ஐந்து பேருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவ்வமைப்பின் தலைவர் சுப்பிரமணி

கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3,000 பேர் டிரான்ஸ்போர்ட் லாரி சுமைதூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வருவதாகவும் தங்களுக்கு எவ்வித பணி பாதுகாப்பும் தற்போது வரை இல்லை என்றும் குறிப்பிட்டார். பணியின் போது தங்களுக்கு ஏதாவது காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்பு நிகழ்ந்தாலோ அந்தந்த நிறுவனங்கள் சார்பில் மட்டுமே உதவிகள் கிடைப்பதாகவும், எனவே அரசு சார்பில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தி தர வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர்,பல ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு என துவங்கப்பட்ட நல வாரியம் தற்போது செயலற்று இருப்பதாகவும் எனவே மீண்டும் தங்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe