தொட்டதற்கெல்லாம் வழக்கு போடும் திமுக- இந்த விஷயத்திற்கு வழக்கு போடவில்லை- கோவையில் OBC கூட்டமைப்பினர் சாடல்...

published 22 hours ago

தொட்டதற்கெல்லாம் வழக்கு போடும் திமுக- இந்த விஷயத்திற்கு வழக்கு போடவில்லை- கோவையில் OBC கூட்டமைப்பினர் சாடல்...

கோவை: இந்தியா கூட்டணியும் திமுகவும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பினரின் தலைவர் ரத்தின சபாபதி கோவையில் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்புக்காக அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அதேசமயம் விரைவாகவும் கல்வி மற்றும் அரசு பணிகளின் அடிப்படையில் தரவுகளை சேகரித்து முறையான இட ஒதுக்கீடு அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.   

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி , சாதிவாரி கணக்கெடுப்புக்கு இந்தியா கூட்டணியும் சமூக நீதி என பேசி வரும் திமுக அரசும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என தெரிவித்தார். 

சாதிவாரி கணக்கெடுப்புக்காக திமுக வசம் உள்ள  39 எம்பிக்கள் மூலமாக நாடாளுமன்றத்தில் எவ்வித முயற்சிகளையும் திமுக மேற்கொள்ளவில்லை என்றும், தொட்டதற்கெல்லாம் வழக்குகளை போடும் திமுக இது தொடர்பாக எவ்வித வழக்கையும் தொடுக்கவில்லை என கூறியவர் உண்மையான சமூக நீதி ஏற்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எவ்வித நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும்  ஸ்டாலின் ஓபிசி பிரிவைச் சார்ந்த அமைப்பினர் பலமுறை முயற்சித்தும் சந்திக்க கூட நேரம் ஒதுக்கவில்லை என தெரிவித்த அவர் , சாதிவாரி கணக்கெடுப்பை முறையாக பின்தங்கியுள்ள மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe