கோவையில் துவங்கிய அரசு பொருட்காட்சி- விவரங்கள் இதோ...

published 1 day ago

கோவையில் துவங்கிய அரசு பொருட்காட்சி- விவரங்கள் இதோ...

கோவை: கோவை வ உ சி மைதானத்தில் முதல் அரசு பொருட்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார். 

இந்த கண்காட்சியில் 31 அரசு துறைகளின் சார்பில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகளில் செய்துள்ள சாதனைகள் விளக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது  ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கு பெரியவர்களுக்கு 15 ரூபாயும் சிறுவர்களுக்கு பத்து ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்காம நேரம் மாலை 4-8 மணி வரை ஆகும்

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன்,
கோவையில் திறக்கப்பட்டுள்ள இந்த அரசு பொருட்காட்சியில் அரசினுடைய 31 துறைகளுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பொதுமக்கள் கடந்த ஆண்டு எவ்வாறு வரவேற்பு கொடுத்தார்களோ அதே போல இந்த ஆண்டும் வரவேற்பு கொடுக்க வேண்டும், பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்த கண்காட்சியில் அரசினுடைய திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் எனவே பொதுமக்கள் நேரில் வந்து பார்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். கடந்தாண்டு கோவையிலே 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் இந்த பொருட்காட்சியை கண்டிருந்தனர், அதனால் அரசுக்கு வருவாயும் ஈட்டப்பட்டு இருந்தது அதேபோன்று  இந்த ஆண்டும் அதைவிட கூடுதலாக மக்கள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.  

தமிழ் பெயர் பலகை குறித்தான கேள்விக்குப்ஏற்கனவே வணிகர் பேரமை கை சார்ந்த நிர்வாகிகள் சென்னை கூட்டத்தில் கலந்து கொண்ட சமயத்தில், அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் ஆங்கிலத்தில் இருந்த பெயர் பலகைகளை எடுத்துவிட்டு முறையாக தமிழில், அரசு வழிகாட்டுதல் படி பெயர் பலகைகளை வைப்பதற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது, அவர்களும், இது குறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என தெரிவித்தார். 

அதேபோல, தற்போது 2000 ரூபாய் அபராத கட்டணம் விதிக்கப்பட்டு இருக்கிறது, தமிழில் பெயர் வைக்காத வணிக கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட இருக்கிறது, இதை தமிழ் வளர்ச்சி துறை கண்காணித்து சுட்டிக்காட்டுகிறது என்றார். தலைமைச் செயலாளர், காணொளி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார்கள், இதில் படிப்படியாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என நம்புகிறோம் எனக் கூறினார்.

இதை மக்களாகவே உணர்ந்து செயல்படுத்த வேண்டும், அதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது, வரப்போகிற காலத்தில் அதற்கான நிச்சயமான காலக்கீடு விதிக்கப்படும் என்றார்.  கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அங்கு முதலில் கன்னடம் எழுதப்பட்டு இருக்கும் அதற்கு பிறகு தான் மற்ற மொழிகள் எழுதப்பட்டு இருக்கும், அதுபோன்ற ஒரு சூழ்நிலை தமிழகத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாக இருக்கிறது என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe