கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் இன்றும் மற்றும் நாளை மாற்றம்

published 2 years ago

கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் இன்றும் மற்றும் நாளை மாற்றம்

கோவை: கோவை வழியாக  செல்லும் ரயில்கள் இன்று மற்றும் நாளை தாமதமாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாளை திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22665), ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.15 மணிக்கு கோவை புறப்பட்டு வந்தது. 

ஆலப்புழாவில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தன்பாத்துக்கு கோவை வழியாக புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352), ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு புறப்பட்டது. இதேபோன்று ஆலப்புழாவில் இருந்து நாளை காலை 6 மணிக்கு தன்பாத்துக்கு கோவை வழியாக புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352), ஒரு மணி நேரம்

தாமதமாக காலை 7 மணிக்கு புறப்படும்.

கோவை வழியாக எர்ணாகுளத்தில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22816), 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 11.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கோவை வழியாக மங்களூரு சென்ட்ரல் புறப்பட்டு வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22637), வரும் வழியில் தேவையான இடத்தில் 35 நிமிடங்கள் நிறுத்திவைத்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe