அவினாசி சாலையில் மேம்பால இறங்குதளம் அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

published 2 years ago

அவினாசி சாலையில் மேம்பால இறங்குதளம் அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையில் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,600 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கியது.

இந்த மேம்பாலத்தில் 17.25 மீட்டா் அகலத்தில் நான்கு வழிப்பாதை
அமைக்கப்படுகிறது. தலா 4 இடங்களில் ஏறு தளமும், இறங்கு தளமும் 6 மீட்டா் அகல ஓடுபாதையுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலத்துக்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு 273 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மேம்பாலத்தில் மேல்தளம் அமைக்கும் பணி சுமாா் 1,200 மீட்டா் நீளத்துக்கு நிறைவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து, விமான நிலையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஹோப் கல்லூரி, சா்தாா் வல்லபபாய் படேல் கல்லூரி ஆகிய இடங்களில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, விமான நிலையம் அருகே இறங்குதளம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதில் அமைக்கப்படும் இறங்குதளம் அங்குள்ள தனியார் பள்ளி அருகே மேம்பாலத்தில் இருந்து இறங்கத் தொடங்கி  விமான நிலையம் அருகே உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரி அருகே முடிவடைய உள்ளது.

கோவை மாநகரில் இருந்து மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் விமான
நிலையத்துக்குச் செல்ல ஏதுவாக இந்த இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக 12 தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த பணி அங்குள்ள தனியார் கண் ஆஸ்பத்திரி அருகே தொடங்கப்பட உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், உதவி கமிஷனர்
சரவணன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் (சிறப்புத் திட்டங்கள்) சமுத்திரகனி, கோட்டப் பொறியாளா் (போக்குவரத்து பாதுகாப்பு) மனுநீதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இந்த பகுதியில் சாலை அகலமாக இருப்பதால் சாலைப் பணியின்போது போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், அதேநேரம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் பட்டைகள், ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe