50 சதவீத சலுகை விலையுடன் கோவையில் கீவா ஸ்கின் மற்றும் ஹேர்  கிளினிக் துவக்கம்... என்னென்ன சிறப்பம்சங்கள் - முழு விவரம்

published 2 years ago

50 சதவீத சலுகை விலையுடன் கோவையில் கீவா ஸ்கின் மற்றும் ஹேர்  கிளினிக் துவக்கம்... என்னென்ன சிறப்பம்சங்கள் - முழு விவரம்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆண் , பெண் இருபாலருக்குமான  சருமம் மற்றும் முடி சம்மந்தமான அனைத்து மருத்துவ சேவைகளையும் வழங்கும் கீவா  ஸ்கின் & ஹேர் கிளினிக்கை  கோவையைச் சேர்ந்த பிரபல உடல் நல நிபுணர்  ஜெயா மகேஷ்  துவக்கி வைத்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக முடி மற்றும் சரும சிகிச்சைகள் வழங்கிவரும் நிபுணர்கள்   சுகந்தி மற்றும் தேவி ஆகியோரால் இந்த கிளினிக் துவங்கப்பட்டுள்ளது.

கிளினிக் திறப்பு விழாவிற்கு பிறகு ஜெயா மகேஷ் கூறுகையில், "நம்மை ஒருவர்  சந்திக்கும் போது நம் முகத்தைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். எனவே நாம்  நம் முகத்தை பொலிவுடனும், இளமையாகவும் பராமரிப்பது அவசியம். முகம் பொலிவுடன் இருந்தால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் மனமும் பொலிவு பெறும்.  சுருக்கங்கள் இல்லாத,  மென்மையான சருமம் பெற கீவா சிகிச்சைகளை வழங்குகிறது. இன்று இந்த கிளினிக்கை தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்றார்.

இதனைத் தொடர்ந்து கீவா கிளினிக் நிறுவனர்களான சுகந்தி மற்றும் தேவி ஆகியோர் கூறியதாவது:-

கீவா ஸ்கின் & ஹேர் கிளினிக்கை ஆர்.எஸ்.புரம் பகுதியில்  துவங்கியது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. கீவா கிளினிக்கில்  அனைத்து  சருமம் மற்றும் முடி சம்பந்தமான சேவைகளை சுகாதாரமான மற்றும் வலியற்ற முறையில் நிபுணர்களின்  ஆலோசனை படி வழங்குகிறோம்.  

ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானவை. வாடிக்கையாளர்களின் தேவைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறாக இருக்கும், எனவே இங்கு தனிநபரின் தேவைக்கேற்ப சேவைகளை இங்கு வழங்குவோம். கீவா -வில்  தரமான தோல் நல சிகிச்சைகளை  வழங்கு ஒரு  பிரத்தியேக தோல் மருத்துவரைக் கொண்ட முழுமையான தோல் மற்றும் முடி பராமரிப்பு மையமாகும். 

இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்குமான முக மற்றும் முடி சம்பந்தமான  தேவைகளுக்கும் பிரச்சனைகளுக்கும்  அவரவர் சருமத்திற்கு ஏற்ற வகையில் சிகிக்சை அளிக்கப்படுகிறது. திறப்பு விழா சலுகையாக செப்டம்பர் இறுதி வரை இந்த கிளினிக்கிற்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  சேவை கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கீவா கிளினிக்-ல் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பான விவரங்களை 04224618369 /9500093905 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

கிளினிக் செல்வதற்கான கூகுள் மேப்  : https://www.google.com/maps?q=11.0100719,76.9499724&z=17&hl=en


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe