மருதமலை அடிவாரத்தில் தனியார் மண்டபத்தில் வேல் திருடிய நபர் பிடிபட்டார்...

published 1 week ago

மருதமலை அடிவாரத்தில் தனியார் மண்டபத்தில் வேல் திருடிய நபர் பிடிபட்டார்...

கோவை: கோவையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா (57) கைது செய்யப்பட்டார்.


கோயில் அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளி வேலை திருடிய நிலையில் போலீசார் வலை வீசி தேடிதல் வேட்டையில் ஈடுபட்டனர்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருதமலை கோயில் அடிவாரத்தில் உள்ள ஒரு மடத்தில் இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் ஒன்றை சாமியார் ஒருவர் திருடியதாக வடவள்ளி காவல் துறையினருக்கு புகார் தரப்பட்டது

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தனர்

வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில் பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தன. பின்னர் திண்டுக்கல் பகுதியில் தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மா போலீசார் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe