செல் பூச்சிகள் கடித்து குழந்தைகள் பாதிப்பு : கோவை ஆட்சியரிடம் புகார்

published 2 years ago

செல் பூச்சிகள் கடித்து குழந்தைகள் பாதிப்பு : கோவை ஆட்சியரிடம் புகார்

கோவை: தனியார் அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் செல் பூச்சிகள் கடித்து, குழந்தைகளும், பெரியவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் குன்னத்தூரான் பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் செல் பூச்சிகள் அப்பகுதி முழுவதும் பரவி இருப்பதாகவும், செல் பூச்சிகள் கடித்ததில் அப்பகுதியில் உள்ள மக்களின் உடல்களில் தடிப்புகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மீண்டும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

மேலும் கைக்குழந்தைகளின் தலை மற்றும் உடல்களில் செல் பூச்சிகள் கடித்ததில் 10 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சுகாதாரத்துடன் செயல்பட்டு வந்த தனியார் அரிசி ஆலை நிர்வாகம் தற்பொழுது முறையாக பராமரிக்கப்படாததால் அரிசி ஆலையில் இருந்து பெரும் அளவில் செல் பூச்சிகள் வெளியேறி வருவதாக செல் பூச்சிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம்  பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe