கோவையில் மலையிலிருந்து விழுந்து பெண் யானை பரிதாப பலி

published 2 years ago

கோவையில் மலையிலிருந்து விழுந்து பெண் யானை பரிதாப பலி

 

கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அடுத்த தமிழக கேரள எல்லையில் மலையிலிருந்து தவறி விழுந்து பெண் யானை பலி.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியை அடுத்த கேரளப் பகுதியான அட்டப்பாடி, அகலி, சைலெண்ட் வேலி பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த யானைகள் உணவிற்காகவும் வலசை செல்லவும் தமிழக- கேரள வனப்பகுதிக்குள் மாறி வருவது வழக்கம்.

இந்நிலையில் அட்டப்பாடியில் உள்ள மலைப் பகுதி வழியாக  யானைக் கூட்டம் ஒன்று நேற்று இரவு வந்துள்ளது. அப்போது மலையின் விளிம்பில் யானைக் கூட்டம் சென்றபோது கால் தவறி பெண் யானை  ஒன்று மலைப் பாதையில் விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில்  அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அட்டப்பாடி வனத்துறையினருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து இன்று காலை அங்கு சென்று வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

மேலும் வேறு ஏதாவது யானைகள் இதைப் போன்று தவறி விழுந்துள்ளதா எனவும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மலைப்பாதையில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe