சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு கோவையில் ஆய்வு

published 2 years ago

சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழு கோவையில் ஆய்வு

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழிக்குழுவின் தலைவரும், சங்கராயபுரம் எம்.எல்.ஏ-வுமான உதயசூரியன்  தலைமையிலான குழுவினர் கோவை மாவட்டத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக  உறுதிமொழிக்குழுவினர் கோவை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து, மருதமலை கோவிலில் லிப்ட் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் உயிர் அறிவியல் துறைகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்தும், ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை மேம்படுத்துவது குறித்தும், கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் சுமார் 152.95 கிலோ மீட்டர்  நீளத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe