குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் நபரின் இடது கை வழக்கு - ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரின் கை என்பது கண்டறியபட்டது

published 2 years ago

குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் நபரின் இடது கை வழக்கு - ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரின் கை என்பது கண்டறியபட்டது

 

கோவை: கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை மட்டும் கண்டெடுக்கப்பட்டது.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில்  டி.எஸ்.பி., துடியலூர் ஆய்வாளர் மற்றும் 8 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட கை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு (39) என்பவரது கை என்று தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

கோவை கிராஸ்கட் சாலையிலுள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபு-வின் செல்போன் கடந்த 15-ஆம் தேதியிலிருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஈரோடு காவல்துறையினரும் இங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது குப்பைத் தொட்டியில் கிடைத்த கை பிரபுவின் கைதான் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe