ஜவ்வரிசி தோசை எப்படி சமைக்கனும்? வாங்க பார்க்கலாம்..

published 2 years ago

ஜவ்வரிசி தோசை எப்படி சமைக்கனும்? வாங்க பார்க்கலாம்..

 

வீட்டில் தோசை மாவு இல்லாத நேரங்களில் சுலபமாக செய்து உண்டு மகிழ்வதற்கான ஜவ்வரிசி தோசை செய்முறை இதோ... 

தேவையான பொருட்கள்:

  • வெங்காயம்- ஒன்று
  • பச்சை மிளகாய்- ஐந்து
  • இஞ்சி- சிறிய துண்டு
  • கறிவேப்பிலை- சிறிதளவு
  • உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

  • ஜவ்வரிசியை கழுவி தண்ணீரை நன்கு வடிகட்டி மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அவ்வப்போது இதனை கிளறினால் தான் அது முழுமையாக ஊறும்.
  • புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • புழுங்கல் அரிசியை நன்கு கழுவி அரைக்கும்.
  • அரிசி நன்கு மசிந்தவுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்க்கவும்.
  • தோசைக் கல்லை சூடாக்கி தோசையை ஊற்றி சூடாக பரிமாறவும்.

இந்த தோசை எல்லா வகை சட்னிகளுடனும் ஒற்றுப் போகும். இதில் அரிசி சேர்க்க விரும்பாதவர்கள் சாமை, கம்பு, ராகி போன்றவற்றை சேர்த்தும் இந்த தோசையை செய்யலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe