இனி எச்சியத் தொட்டு பந்தை துடைக்க முடியாது: உமிழ்நீர் தடையை நிரந்தரமாக்கியது ஐசிசி

published 2 years ago

இனி எச்சியத் தொட்டு பந்தை துடைக்க முடியாது: உமிழ்நீர் தடையை நிரந்தரமாக்கியது ஐசிசி

நேற்று நடைபெற்ற ஐசிசி நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு விதிமுறைகள் சிலவற்றுள் மாற்றங்கள் செய்து அறிவுதுள்ளது ஐசிசி. இந்த அறிவிப்புகள் செப்டம்பர் 20, 2022 அன்று நிறைவேற்றப்பட்டு அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

முன்னாள் இந்தியக் கேப்டனும், பிசிசிஐ-த் தலைவருமான சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் பரிந்துரைகளைத் தலைமை நிர்வாகக் குழு (சிஇசி) அங்கீகரித்துப் பிறகு இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டுப் பந்தைத் துடைக்க உமிழ்நீரைப் பயன்படுத்துவதை ஐசிசி முன்பு தடைசெய்தது. "இந்தத் தடைக் கோவிட் தொடர்பான தற்காலிக நடவடிக்கையாகச் சர்வதேசக் கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. மேலும் தடையை நிரந்தரமாக்குவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது" என்று ஐசிசி அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்ற மாற்றங்கள்:

"இதைத் தொடர்ந்து வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதன் படி பேடிங்க் செய்து கொண்டிருக்கும் அணி வீரர் அவுட் ஆகும் போது, ​​களமிறங்கும் புதிய பேட்ஸ் மான் நான்-ஸ்டிரைக் முனையில் இல்லாமல் ஸ்டிரைக் முனையிலே களம் இறங்க வேண்டும். இதற்கு முன் இருந்த நான்-ஸ்டிரைக் முனையில் களம் இறங்கும் விதியை மாற்றிப் புதிதாகக் களம் இறங்கும் வீரர் ஸ்ட்ரைக் முனையில் இரண்டு நிமிடங்களுக்குள் தயாராக இருக்க வேண்டும். 

நான்-ஸ்ட்ரைக் முனையில் இருக்கும் வீரரின் ரன்-அவுட்கள் குறித்து மாற்றம் ஏற்படுத்தியுள்ள ஐசிசி, நான்-ஸ்ட்ரைக் முனையில் உள்ள வீரரை அவுட் ஆக்குவதை 'அன்ஃபேர் ப்ளே' பிரிவிலிருந்து 'ரன் அவுட்' பிரிவுக்கு மாற்றியுள்ளது. அதாவது நான்-ஸ்ட்ரைக் முனையில் இருக்கும் வீரரையும் ரன்-அவுட்டின் மூலம் அவுட் ஆக்க முடியும் என்பதாகும். 

மேலும், பந்து வீசப்படும் போது ஸ்ட்ரைக்கரின் பேட் அல்லது அந்த நபரின் உடல் பகுதிகளுள் சிறிதளவாவது கிரீஸிற்குள் இருக்க வேண்டும். இல்லையெனில் அம்பயர் அதை 'டெட் பால்' என்று அறிவிப்பார். பந்தை வீசுபவர் ஸ்ட்ரைக் முனையில் இருக்கும் வீரர் கிரீஸை விட்டு வெளியே வந்து அடிக்கும் படியாகப் பந்து வீசினால் அது 'நோ பால்' என்று அழைக்கப்படும். 'டெட் பால்' மற்றும் 'நோ பால்' ஆகியவற்றிற்கு முன்பு இருந்த ஒரு ரன் பெனால்டியை ஐந்து ரன்கள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

மற்றொரு மாற்றத்தில், பந்து வீச்சாளர்கள் ரன்-அவுட் செய்யும் முயற்சியில் பந்து வீச்சுக்கு முன்னரே பந்தை ஸ்ட்ரைக்கரின் ஸ்டம்பை நோக்கி வீசும் வழக்கம் இப்போது கருதப்படாது. முன்பு, பந்து வீச்சாளர் பந்தை வீசுவதற்குள் ஸ்ட்ரைக்கர் கிரீஸை விட்டு வெளியே முன்னேறிச் செல்வதைக் கண்டால் அப்போது பந்து வீச்சாளர், ஸ்டிரைக்கரை ரன் அவுட் செய்ய முயற்சிக்கலாம். இந்த நடைமுறை இனி 'டெட் பால்' என்று அழைக்கப்படும்.

மற்றொரு முக்கிய முடிவில், அணிகள் திட்டமிடப்பட்ட நேர அட்டவணையைத் தொடரத் தவறினாலோ அல்லது ஸ்லோ ஓவர் ரேட் கொண்டு விளையாடினாலோ T20-களில் இருந்த 30-யார்டு வட்டத்திற்கு வெளியே இருக்கும் ஒரு பீல்டரை குறைக்கும் அபராதம் இப்போது ODI-களிலும் ஏற்றுக்கொள்ளப்படும்."

இவ்வாறு ஐசிசி அறிவித்துள்ளது.

"கமிட்டி உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பில் நான் மகிழ்ச்சியடைந்தேன். இதன் விளைவாக முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டன. அனைத்து உறுப்பினர்களின் மதிப்புமிக்க பங்கேற்பு மற்றும் பரிந்துரைகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்," என்று கங்குலி கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe