தீபாவளி தினத்தில் கோவையில் மழை இருக்கா? 7 நாட்களுக்கான வானிலை ஆய்வு மைய ரிப்போர்ட் இதோ!

published 1 week ago

தீபாவளி தினத்தில் கோவையில் மழை இருக்கா? 7 நாட்களுக்கான வானிலை ஆய்வு மைய ரிப்போர்ட் இதோ!

கோவை: கோவையில் 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் மழை வருமா, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாட முடியுமா என்று பலரும் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே இந்த வரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Ad:

அதன்படி, கோவையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி நாளில் கோவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நவ.1,2,3ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப நிலையைப் பொறுத்தவரை இந்த வாரம் குறைந்தபட்சம் 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் போது, எதிர்பாராத சிறு தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில், அன்றைய தினத்தில் லேசான மழை என்பது, கோவை மக்களின் பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாம். மழையைக் கொண்டாடலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe