நொய்யல் ஆறு குறித்து என்.ஐ.டி பேராசிரியர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர அறிக்கை- விவசாயிகள் அதிர்ச்சி...

published 2 weeks ago

நொய்யல் ஆறு குறித்து என்.ஐ.டி பேராசிரியர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர அறிக்கை- விவசாயிகள் அதிர்ச்சி...

கோவை: கோவை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து உருவாகும் நொய்யல் நதி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாய்கிறது.

தற்போது நகரமயமாக்கல் ஆகியவற்றால் நொய்யல் ஆறு மாசடைந்து, கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறியுள்ளது.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது.

இது குறித்து நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், சென்னை என்ஐடி பேராசிரியர்கள் மூலமாக, நொய்யல் ஆற்றின் நீர் தன்மை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.

இந்த ஆய்வின் முடிவில் நொய்யல் ஆற்றின் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது என்றும் கால்நடைகளோ மனிதர்களோ பயன்படுத்த முடியாத வகையில் மாசடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதற்கு நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு கரூர் ஆகிய மாவட்டங்களில், புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, குடல் தொடர்பான நோய்கள் பலருக்கும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருஞான சம்பந்தன் தெரிவித்தார்.

நொய்யலை பாதுகாக்க கோரி கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம், சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe