அவினாசி சாலையில் காரின் சக்கரம் கழன்று ஓடி விபத்து..!

published 2 years ago

அவினாசி சாலையில் காரின் சக்கரம் கழன்று ஓடி விபத்து..!

 

கோவை: கோவை அவினாசி சாலை காவலர் பயிற்சி பள்ளி அருகே  சாலையைக் கடக்க முயன்ற சொகுசு கார் மீது மற்றொரு சொகுசு கார் மோதியதில் காரின் சக்கரம் கழன்று சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் தனியார் ஹோட்டல் ஊழியர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே இரவு சொகுசு கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது அண்ணா சிலை பகுதியிலிருந்து பீளமேடு நோக்கி அதிவேகமாக வந்த மற்றொரு சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையைக் கடக்க முயன்ற கார் மீது மோதியது.

இதில் இரண்டு கார்களும் கட்டுப்பாட்டை இழந்து இழுத்துச் செல்லப்பட்டதில் ஒரு காரின் சக்கரம் கழன்று சாலையில் நின்றிருந்த இரண்டு கார்கள் மற்றும் சாலையில் சென்ற இரு சக்கர வாகனம் மீதும் மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் இரவு பணிக்காகச் சென்று கொண்டிருந்த தனியார் ஹோட்டல் காவலாளி மதியழகன் (42), மற்றும் அதே உணவகத்தில் கார் பார்கிங்கில் வேலை செய்யும் அசோக் (25) இருவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டுக் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் கார்களை சாலை ஓரத்தில் நிறுத்தினர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe