எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி கோவையில் சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

published 2 years ago

எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி கோவையில் சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை: பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கோவையில் சமத்துவ மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக மத்திய-மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரிகுறைப்பு செய்திடவும், பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்தியும், தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக்  கண்டித்து கோவை மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe