கோவையில் குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

published 2 years ago

கோவையில் குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

 

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் உயிர் அமைப்பு  இணைந்து  குட்டி காவலர் என்ற  திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தினை காணொலி காட்சி மூலம் சென்னையில்  தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் உறுதி மொழியினை வாசிக்க, கோவை கொடிசியா வளாகத்தில் திரண்டு இருந்த 4,500 மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கொடிசியா வளாகத்தில் இருந்த மாணவர்கள் மட்டுமின்றி, கோவை மாவட்டத்தில் பள்ளிகளில் 4.20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் முறையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றனர்.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட  கலெக்டர் சமீரன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி  கமிஷனர் பிரதாப், மண்டல தலைவர்கள்  கவுன்சிலர்கள், கல்வித்துறை அதிகாரிகள்  உள்பட பலர் பங்கேற்றனர்.  

மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு குட்டி காவல் அதிகாரி போல இருந்து பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் ஆகியோரிடம் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும்போதும் பயணிக்கும்போதும் சீட் பெல்ட் அணியவும், வேகமான முறையில் வாகனங்களை இயக்காத வண்ணம் இருக்கவும், டிராபிக் சிக்னலில் சிகப்பு விளக்கை மீறி செல்லாமலும், வாகனங்களை இயக்கும் போது செல்போன் உபயோகிக்காமலும், சாலை விதிகளை கடைப்பிடிக்கவும்  வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாவட்ட கலெக்டர் சமீரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

இன்று மகத்தான திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்திருக்கின்றார்.,ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி காவலரை நியமித்து, சாலை பாதுகாப்பை பின்பற்றி நடக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றோம் .

கோவை மாவட்டத்தில் 4.25 லட்சம் மாணவர்கள் உறுதி மொழி எடுத்து உலக சாதனை படைத்து இருக்கின்றனர்., இந்த ஹாலில்  நேரடியாக 4500 பேரும் ,
இணையதளம் மூலமாக 4.20 லட்சம் பேரும் உறுதி மொழி எடுத்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe