கோவை மாவட்டத்தில் வரும் 8ம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தகவல்

published 2 years ago

கோவை மாவட்டத்தில் வரும் 8ம் தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தகவல்

கோவை: கோவை மாவட்டத்தில் வரும் 8ம் தேதி 29-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் 4-வது அலை பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வரும் 8ம் தேதி சிறப்பு மாபெரும் 29-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் 2,505 தடுப்பூசி முகாம்கள், மாநகராட்சிப் பகுதிகளில் 950 முகாம்கள், நகராட்சிப் பகுதிகளில் 224 முகாம்கள் என மொத்தம் 3,679 இடங்களில் இந்த முகாம் நடைபெறும்.
இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தவறாமல் இந்த 29-வது கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு 4-வது அலை தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். மேலும் முகாம் நடைபெறும் இடங்களை பொதுமக்கள் மாவட்ட இணையதளம் coimbatore.nic.in மூலம் அறிந்து கொள்ளலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe