ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் தேவையில்லை...!

published 2 years ago

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பேருந்துகளில் டிக்கெட் தேவையில்லை...!

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறையின் நேற்றைய அறிவிப்பின்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பேருந்தில் பயணிக்க டிக்கெட் எடுக்கத் தேவை இல்லை.

இதற்கு முன் மூன்று வயது வரை இலவச பயணத்திற்கும் 12 வயது வரை அரை டிக்கெட் பெற்று பயணம் செய்யவும் அனுமதித்து இருந்த தமிழக அரசு இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கத் தேவை இல்லை என்று கூறியுள்ளது.

இதற்கு முன் பெண்கள், முதியோர், மூன்றாம் பாலினத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்ற வரிசையில் இப்போது இந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பது மக்களின் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கூடுதலாக அரசின் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இரு முனைகளிலும் இருந்து பயணம் செய்யுமாறு டிக்கெட் புக் செய்வோருக்கு 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு திட்டத்தின் கீழ் மக்கள் மாநகராட்சி பேருந்துகளில் பயணிக்க பயணியர் அட்டை பெற்று, அதில் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்து, அதனைப் பயன்படுத்தி பேருந்துகளில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் தினமும் பேருந்துகளில் டிக்கெட் பெறுவதற்கு சில்லறை தேடும் அச்சத்திலிருந்து மக்கள் விடுபடுவர். 

இந்த திட்டம் முதல் கட்டமாகச் சென்னை, கோவை மற்றும் மதுரையில் தொடங்கப்படும் என்பதும், இதற்காகப் போக்குவரத்து துறைக்கு அரசு சார்பில் ரூ. 70 கோடியும், இலவச டிக்கெட் திட்டத்திற்கு வருடம் ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe