கோவையில் 103 பேருக்குப் பணியாணை வழங்கிய மத்திய இணை அமைச்சர்

published 2 years ago

கோவையில் 103 பேருக்குப் பணியாணை வழங்கிய மத்திய இணை அமைச்சர்

கோவை: இந்தியா முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கோவையில் இன்று 103 இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான பணியாணையை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

பிரதமர்  மோடி 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கும் வேலைவாய்ப்பு விழாவை இன்று காலை  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் சுமார் 115 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 75 ஆயிரம் பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி கோவை பீளமேட்டில் உள்ள பி. எஸ். ஜி கல்லூரி வளாக அரங்கிலும் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

எம்.எல்.ஏ.,க்கள் வானதி ஸ்ரீநிவாசன், சரஸ்வதி, தபால்த் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்மிதா அயோத்தியா, தமிழக சர்கிள் முதன்மை போஸ்ட் மாஸ்டர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வங்கிகள் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் பணிக்குச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இதையும் பார்க்கலாமே... கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe