கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : கேட்பாரற்று இருந்த 7 கார்கள் பறிமுதல்

published 2 years ago

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : கேட்பாரற்று இருந்த 7 கார்கள் பறிமுதல்

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக வின்செண்ட் சாலை பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்


கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ஆம் தேதி அதிகாலை கார்  வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்கள் குறித்து மாநகர போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் முக்கிய பகுதிகளில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சாலையோரங்களில் நிற்கும் கார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்று போக்குவரத்து போலீசார் உக்கடம் வின்செண்ட் சாலையோரத்தில் கேட்பாரற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த 7 கார்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe